இராணுவ கல்லூரி பட்டமளிப்பு விழா ஜனாதிபதி தலைமையில்

Report Print Steephen Steephen in சமூகம்

கம்பஹா பட்டலந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் இராணுவ கல்லூரியின் 11வது பரிசளிப்பு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவும் கலந்துக்கொண்டார்.

இவர்களை தவிர பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன, பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன, கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன, இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஓய்வுபெற்ற படை தளபதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் ஆரம்பமாகிய பாடநெறியை உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 128 அதிகாரிகள் கற்றனர்.

பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், ருவாண்டா, சூடான், வியட்நாம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

Latest Offers