காதலிக்கு பியர் கொடுத்துவிட்டு காதலன் செய்த காரியம்

Report Print Steephen Steephen in சமூகம்

20 வயதான காதலியை விடுதிக்கு அழைத்துச் சென்று பியர் அருந்த கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் காதலனை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய காதலன் அதனை ஒளிப்பதிவு செய்து, முகநூலில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி தொடர்ந்தும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக காதலன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இறுதியில் ஒரு நாள் காதலியை தனது வீட்டுக்கு வருமாறு காதலன் அச்சுறுத்தியுள்ளார்.

அப்படி வரவில்லை எனில் விடுதியில் எடுத்த வீடியோவை முகநூலில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காதலனின் வீட்டுக்கு சென்ற யுவதி இரவு அங்கு இருந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் யுவதியிடம் விசாரித்துள்ளனர். அப்போது யுவதி சகல தகவல்களையும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இது குறித்து பெற்றோர் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதற்கு அமைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.