மின்சாரம் தாக்கி 3 பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

லிந்துலை - பேரம், எகமுத்துகம பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் வெங்கடாசலம் சகுந்தலா என்ற 52 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டிற்கு நீர் இறைக்கும் மோட்டருக்கு அருகாமையில் வயரினைப் பிடித்தவாறு இந்த பெண் விழுந்து கிடந்ததாகவும், இவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முன்பே உயிரிழந்துள்ளதாகவும் அவரின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

இறந்தவரின் சடலம் பிரேத பிரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers