ஏணியை தாருங்கள் ஏற்றி விட வேண்டாம்!

Report Print Kari in சமூகம்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு வவுனதீவில் இன்றைய தினம் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

வாழ்வகம் விசேட தேவையுடையோர் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

ஊனம் உடலில் இல்லை மற்றவர்களின் மனதில், என்பதை உலகறிய எடுத்துக் கூறும் வண்ணமும் ஏணியை தாருங்கள் ஏற்றி விட வேண்டாம் என்பதற்கமையவும் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, விசேட தேவையுடையோர் மற்றும் சமூக அமைப்புக்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, குறித்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கும், அரச அதிகாரிகளுக்கும் அழைப்பு விடப்பட்டிருந்த போதிலும் எவரும் கலந்துகொள்ளாமை சிலரிடையே விசனத்தைத் தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers