இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன், பொகவந்தலாவ பிரதான வீதியில், வனராஜா பகுதியில் இன்றைய தினம் இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

நோர்வூட் பகுதியில் இருந்து வந்த முச்சக்கரவண்டி, பேருந்து ஒன்றை முந்தி செல்லமுற்பட்ட போது எதிரே வந்த முச்சக்கரவண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த விபத்தின் காரணமாக எவருக்கும் எதுவித பாதிப்புக்களும் இல்லை எனவும், விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers