நிர்ணய விலையிலேயே தேங்காய் விற்பனை செய்யப்படவேண்டும்

Report Print Suman Suman in சமூகம்

தேங்காயை நிர்ணய விலையான 75 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்வதனை அனுமதிக்க முடியாது என கரைச்சி பிரதேசசபையின் செயலாளர் க.கம்சநாதன் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை நிர்ணய விலையான 75 ரூபாவுக்கு மேல் பலர் விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று சந்தையில் தேங்காய் விற்பனை செய்யும் வியாபாரிகளை அழைத்த அவர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

நிர்ணய விலைக்கு மேல் தேங்காய் விற்பனை செய்யப்பட்டால் அதற்காக விலைக்கட்டுப்பாட்டு பிரிவால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

தென்னிலங்கையைச் சேர்ந்த சில நிறுவனங்கள் தேங்காய்களை உரிக்காமல் கிலோ ஒன்றுக்கு 80 ரூபாவுக்கு மேல் கொடுத்து பெற்றுச் செல்கின்றார்கள்.

எனவே சந்தையில் நாங்கள் 75 ரூபாவுக்கு விற்பனை செய்யும் வகையில் தேங்காயின் கொள்வனவு விலையை நிர்ணயித்தால் சந்தைக்கு வரும் தேங்காய்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்.

அத்தோடு அம்பாள்குளம் பொருளாதார நிலையத்திற்கு பலர் தேங்காய்களை கொண்டு செல்கின்றனர் காரணம் அங்கு வரி அறவிடப்படுவதில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.