விக்ரம் உட்பட ஆவா குழுவின் ஆறு பேரின் விளக்கமறியல் நீடிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

கொழும்பு மற்றும் வவுனிய முதலான பகுதிகளில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் விக்ரம் உள்ளிட்ட 6 பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, அவர்களது விளக்கமறியல் காலத்தை எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 28ஆம் திகதி கொழும்பில் மூவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வவுனியாவில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்கள், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களின் விளக்கமறியல் காலத்தை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.