மாதாந்தம் ஒரு லட்சம் மெற்றிக் தொன் வீதம் அரிசி இறக்குமதி

Report Print Ajith Ajith in சமூகம்

2018ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புதுவருடம் வரை மாதாந்தம் ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று கூடிய பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உப குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், அடுத்த ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டுவரை சந்தைக்கு தட்டுப்பாடின்றி அரிசியை விநியோகம் செய்வதற்காக எந்தவொரு தனியார் வர்த்தக நிறுவனத்துக்கும் அரிசியை இறக்குமதி செய்ய சந்தர்ப்பம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதற்கமைய, இறக்குமதியின்போது ஒரு கிலோ அரிசிக்காக விதிக்கப்பட்டிருந்த 25 சதம் என்ற விசேட சந்தை பொருள் வரி அமுலில் இருக்கும் காலத்தை 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதிவரை நீடித்துள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.