தவளை பிடிக்கச் சென்ற சிறுவன் கழிவறை குழிக்குள் விழுந்து மரணம்

Report Print Steephen Steephen in சமூகம்

குருணாகல், குளியாப்பிட்டிய மகுலாகம பிரதேசத்தில் நான்கு வயதான சிறுவன் கழிவறை குழிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

சதீஷ் கிஷான் விஜேசிங்க என்ற சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் தந்தை வேலைக்கு சென்றிருந்த நிலையில் தாய் ஆடைகளை கழுவச் சென்றுள்ளார், இதன்போதே சிறுவன் கழிவறை குழிக்குள் விழுந்துள்ளார்.

வேலையில் இருந்து வீடு திரும்பிய தந்தை பிள்ளை வீட்டில் இல்லாததால் தேடியுள்ளார். கழிவறை குழிக்குள் இறங்கி பார்த்த போது சிறுவனின் சடலம் கிடைத்துள்ளது.

தவளை பிடிக்க தான் கழிவறை குழிக்கு அருகில் செல்வதாக குறித்த சிறுவன் அயல் வீட்டு சிறுவனிடம் கூறிச் சென்றுள்ளார்.

கழிவறை குழி மூடப்படாமல் இருந்ததே மரணத்திற்கு பிரதான காரணம் என தெரியவந்துள்ளது.

மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனைகள் குளியாபிட்டிய வைத்தியசாலையில் இன்று நடைபெறவுள்ளன.

குளியாபிட்டிய பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.