அரச மருத்துவர் சங்கத்தை மாபியா எனக் குறிப்பிட்ட வடக்கு எதிர்க்கட்சித் தலைவர்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

அதிகாரப் பகிர்வை அல்லது சமஷ்டியை வேண்டிநிற்கும் மருத்துவர்கள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திலிருந்து விலக வேண்டுமென்று வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

வடமாகாண சபையின் சுகாதார சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரச மருத்துவர் சங்கச் செயலாளர் புதிய அரசியலமைப்பு மாற்றத்திற்கான இடைக்கால அறிக்கையில் சுகாதார சேவைகள் மாகாண சபையின் கீழ் கொண்டு வருவதற்கான முன்மொழிவுகள் இருப்பதனை முற்றாக எதிர்த்து அறிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை மாகாண சபைக்கு முழுமையாக வழங்குவதனை 1999ஆம் ஆண்டில் தாங்கள் தொடர்ச்சியாக நடாத்திய பதின்மூன்று நாள் தொழிற்சங்க நடவடிக்கை மூலம் தடுத்துள்ளதாக அறிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு சுகாதார சேவைகள் அதிகாரப் பகிர்வின் மூலம் மாகாணங்களிற்குப் பகிரப்படுவதனை முற்றாக எதிர்த்து நிற்கும் அரச மருத்துவர்கள் சங்கத்திலிருந்து, சமஷ்டியினை அல்லது அதிகாரப் பகிர்விற்கான அபிலாஷைகளைக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், பிரிந்து தங்களிற்கான பிறிதொரு அமைப்பினை ஏற்படுத்த வேண்டுமென்று அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

அரச மருத்துவர் சங்கம் வட மாகாணத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்குவதற்கு தடையாக இருப்பது மட்டுமல்லாது, யாழ். மருத்துவ பீடத்திலிருந்து வெளியேறுபவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது எமது பிரதேசத்தில் வேலை செய்வதற்கான ஏற்பாட்டிற்கும் மற்றும் தற்காலிகமாகப் மருத்துவர் பற்றாக்குறையைப் போக்குவதற்கு இந்தியாவிலிருந்து மருத்துவர்களை வரவழைப்பதற்கும் தடையாக இருக்கின்றார்கள்.

அத்துடன் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களை அமைத்து மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்குவதற்கும் தடையாக இருந்து ஓர் “மாபியா” இயக்கம் போன்று செயற்படுவதாகவும் அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

மேலதிக செய்தி - சுமி

Latest Offers