ஒரு ரூபாவிற்காக உயிரை பணயம் வைத்த நபர்!

Report Print Kamel Kamel in சமூகம்

ஒரு ரூபா பணத்திற்காக உயிரை பணயம் வைத்த நபர் ஒருவர் தொடர்பில் தென் மாகாணத்தின் திஹகொட பிரதேசத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

கொடுக்கல் வாங்கல் ஒன்றின் போது ஒரு ரூபா பணத்தை பாதுகாத்துக் கொள்ள முயற்சித்த நுகர்வோர் ஒருவர் கை, கால்கள் உடைந்து, மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

அண்மையில், கடையொன்றில் மளிகைப் பொருட்களை கொள்வனவு செய்த நபர், அருகாமையில் நடைபாதையில் தேங்காய் கொள்வனவு செய்துள்ளார்.

தேங்காய் ஒன்றை தெரிவு செய்த நபர் பணம் செலுத்துவதற்காக முயற்சித்த போது கையிலிருந்து நழுவிய ஒரு ரூபா நாணயம் வீதியில் உருண்டோடியுள்ளது. இதன் போது அந்த ஒரு ரூபா பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார்.

இந்த முயற்சியின் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று குறித்த நபர் மீது மோதுண்டு, குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்தினால் கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த நிலையிலும் ஒரு ரூபா நாணயக் குற்றியை அந்த நபர் இறுகப் பற்றிக் கொண்டிருந்தமை, குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்தவர்களை நெகிழ்வடையச் செய்துள்ளது.

Latest Offers