அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு நாள் புதுக்குடியிருப்பில் அனுஷ்டிப்பு!

Report Print Mohan Mohan in சமூகம்

தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு தினம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு ஜனநாயக போராளிகள் கட்சியின் ஒழுங்கமைப்பில், புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றிருந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் இருந்து செயற்பட்ட மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள், அரசியல் ரீதியிலும், இராஜதந்திர ரீதியிலும் தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்தினை உலக அரங்கில் முன்னிறுத்தினார்.

இந்நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு இயற்கை எய்திய மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு தினம் புதுக்குடியிருப்பில் இன்று பிற்பகல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.