முல்லைத்தீவின் சித்த ஆயுள்வேத வைத்தியசாலை மீள இயங்க ஆரம்பம்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவில் ஒலுமடு உப அலுவலகம் மற்றும் சித்த ஆயுள்வேத வைத்தியசாலை என்பன மீள இயங்க ஆரம்பித்துள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அந்தப் பகுதி மக்கள தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

ஒலுமடுப் பகுதியில் உள்ள புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப அலுவலகம் மற்றும் சித்த ஆயுள்வேத வைத்தியசாலை, நூலகம் என்பன கடந்த காலங்களில் சிறப்பாக செயற்பட்ட போதும், கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக சேதமடைந்து காணப்பட்டது.

இந்த நிலையில், மீள்குடியேற்றத்தின் பின்னர் குறித்த கட்டிடங்கள் அமைந்துள்ள வளாகமானது இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்து வந்துள்ளது.

இதன் பின்னர் குறித்த பகுதியை விடுவிக்குமாறு பல்வேறு தரப்புக்களும் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நல்லாட்சி அரசினால் இந்த காணி விடுவிக்கப்பட்டது.

குறித்த பகுதியில் தற்போது புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப அலுவலகம் சித்த ஆயுள்வேத வைத்தியசாலை, என்பன மீள இயங்கி வருகின்றது.

மேலும், இவ்வாறான வைத்தியசாலை இயங்குவதனால் பெருமளவானோர் தமது மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாக இருப்பதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.