இலங்கையின் முன்மாதிரி ஏனைய நாடுகளுக்கு தூண்டுதலை அளிக்கும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Report Print Ajith Ajith in சமூகம்

நிலக்கண்ணி தடை தொடர்பான ஒட்டாவா உடன்படிக்கையில் இலங்கை இணைந்துள்ளமையானது ஏனைய நாடுகளையும் அந்த உடன்படிக்கையில் இணைய தூண்டுலை வழங்கும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆயுதத்துறைக்கான பணிப்பாளர் ஸ்டீவ் கூஸ் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதுவரையில் ஒட்டாவா உடன்படிக்கையில் இணையாத நாடுகள், தமது நிலைப்பாட்டை மாற்றி அதில் இணைவதற்கு இலங்கையின் முன்மாதிரி தூண்டுதலாக அமையும் எனவும் கூஸ் கோரியுள்ளார்.

2015ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கை இந்த உடன்படிக்கையில் இணைந்துக்கொள்ளும் விருப்பத்தை வெளியிட்டிருந்தமையை கூஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நிலக்கண்ணிகளுக்கு எதிரான ஒட்டாவா உடன்படிக்கையில் அமெரிக்கா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், ரஸ்யா உட்பட்ட 33 நாடுகள் இன்று கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.