வவுனியாவில் விபத்து: ஐந்து வயது சிறுமி உட்பட மூவர் வைத்தியசாலையில்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - வேப்பங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஐந்து வயது சிறுமி உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

வேப்பங்குளம் ஐந்தாம் ஒழுங்கைக்கு அருகில் வைத்து மோட்டார் சைக்கிளொன்றுடன், துவிச்சக்கரவண்டியொன்று மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார் வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கரவண்டி மீது அதே பாதையில் வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 67 வயதுடைய முதியவரொருவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த 38 வயதுடைய பெண்ணும், அவரது 5 வயதுடைய மகளும் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து காயமடைந்தவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், விபத்து தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.