போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

போதை மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்த இளைஞன் மட்டக்குளி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 400 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்குளி, அலி தோட்டம் பகுதியை சேர்ந்த 17 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.