பெண்ணொருவர் தனிமையிலிருந்த வீட்டிற்குள் நுழைந்த இளைஞருக்கு நேர்ந்த கதி

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலையில் பெண்ணொருவர் தனிமையில் இருந்த வீட்டிற்குள் அத்துமீறி உள் நுழைந்த இளைஞர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை, ஐந்தாம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டுக்குள் குறித்த சந்தேகநபர் புகுந்த நிலையில் அப்பெண் கூக்குரலிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அயல் வீட்டுக்காரர்கள் சந்தேகநபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த நிலையில் சந்தேகநபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, இன்று அவரை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.