கொம்பன் யானைகளை பாதுகாக்க விசேட திட்டம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

காட்டு யானைகளை(கொம்பன்) பாதுகாக்கும் வகையில் விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தவுள்ளதாக நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

கொம்பன் யானைகளை பாதுகாக்கும் நோக்கில் யானைகளின் கழுத்தில் சமிக்ஞையுடன் கூடிய கழுத்துப்பட்டிகள் அணிவிக்கப்படவுள்ளதாகவும் இதன் காரணமாக யானைகளை ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் காட்டு யானைகளின் தொல்லைகளிலிருந்து கிராமங்களை பாதுகாக்கும் நோக்கில் மின்சார வேலிகளும் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.