பொலன்னறுவை சிறையில் 15 வயது சிறுவன் தற்கொலை

Report Print Steephen Steephen in சமூகம்

பொலன்னறுவை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பராயமடையாத சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை நடைபெற்றுள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட சிறுவன் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பிலான குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற உத்தரவுக்கமைய பொலன்னறுவை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

பதியதலாவை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுவன் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூண்டுக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அந்த சிறுவனது தற்கொலைக்கு வேறு நபர்கள் யாரேனும் உதவியுள்ளார்களா என்பது தொடர்பாக சிறைச்சாலை உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பொலன்னறுவை பொலிஸாரும் சம்பவம் தொடர்பில் தனியான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.