பாலியல் இலஞ்சம் பெற்று பெண்களை வெளிநாட்டிற்கு அனுப்பிய நபர் கைது

Report Print Vethu Vethu in சமூகம்

போலி ஆவணங்களை தயாரித்து இலங்கை பெண்களை சுற்றுலா வீசா மூலம் வெளிநாட்டிற்கு அனுப்பும் வியாபாரம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கலேவெல பிரதேசத்தில் உள்ள நபர் ஒருவர் நீண்ட காலமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோசடி நடவடிக்கை மேற்கொள்வதாக கூறப்படும் தொழில் நிறுவனம் ஒன்றை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

இதன் போது அங்கு போலியாக தயாரிக்கப்பட்ட அரச ஆவணங்கள், முத்திரைகள், வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் 50 பெண்களின் புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த மோசடி நடவடிக்கையை மேற்கொண்ட நபர் பெண்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக பாலியல் இலஞ்சம் கோரியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எம்.எம்.மொஹமட் ஸ்மையில் என்ற நபரே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.