கேப்பாப்புலவு பிள்ளையார் கோவில் வளாகத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேற்றம்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு கேப்பாப்புலவு கிராம சேவையாளர் பிரிவு- ஞானமூர்த்தி பிள்ளையார் கோவில் வளாகத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் அப்பகுதியில் இருந்து வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் காணி உரிமையாளர்கள் வற்றாப்பளை பகுதியில் குடியிருக்கும் நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி குறித்த காணிகளை இராணுவத்தினர் பொதுமக்களிடம் கையளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர் மேலும் சில பகுதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்தப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.