தேங்காய் விலையில் திடீர் மாற்றம்!

Report Print Nivetha in சமூகம்

பொது மக்களுக்கு நியாய விலையில் தேங்காயை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தால் தேங்காய் விலையில் திடீர் மாற்றம் ஏற்படவுள்ளது.

சந்தையில் 75 ரூபாவுக்கு மேலதிகமாக தேங்காயை விற்பனை செய்ய முடியாது என்று தெங்கு உற்பத்தி சபையின் தலைவர் கபில யகந்தாவல தெரிவித்துள்ளார்.

தேங்காய்க்கு ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர்கள் கூடுதலான இலாபத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தேங்காயின் விலையை அதிகரித்துள்ளதாகவும், இதுவே தேங்காய் விலை அதிகரிப்பிற்குக் காரணம் என்றும் தெங்கு உற்பத்தி சபையின் தலைவர் கபில யகந்தாவல கூறியுள்ளார்.

இதேவேளை, அதிக விலைக்கு தேங்காயை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சட்டத்தின் முன் நிறுத்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுமென்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.