வடிகானுக்குள் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Report Print Kari in சமூகம்
132Shares

மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரிக்கு அருகிலுள்ள வடிகானுக்குள் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி ஷிந்தக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இன்று காலை வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் வடிகானில் கிடந்த சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்படுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.