தமிழ் மக்களுக்கு ஆங்கிலத்தில் விண்ணப்பப்படிவங்கள் விநியோகம்

Report Print Kari in சமூகம்
113Shares

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தகவல்களை சேகரிப்பதற்காக வடக்கு, கிழக்கில் விண்ணப்படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த விண்ணப்பப்படிவங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக கிராம சேவகர்களுக்கு வழங்கப்பட்டு கிராமங்கள் பூராகவும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

எனினும் நான்கு பக்கங்களை கொண்ட இந்த விண்ணப்பப்படிவங்கள் ஆங்கிலத்தில் காணப்படுவதால் தாம் சிரமங்களை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

மட்டக்களப்பு, ஏறாவூர் பற்று மற்றும் மண்முனைப்பற்று போன்ற பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த விண்ணப்பப்படிவங்கள் ஆங்கிலத்தில் நிரப்பப்பட்டுள்ளன.

இருப்பினும் குறித்த படிவத்தில் கையொப்பம் மாத்திரமே தாங்கள் இடுவதாகவும் மிகுதி அனைத்தையும் கிராம சேவகரே நிரப்புவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் எதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என தங்களுக்கு குழப்பமாக உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வருகின்ற தேர்தலில் வாக்கு எடுபதற்காகவா அல்லது இன்னும் மூன்று மாதங்களில் ஜெனிவாவில் இடம்பெற உள்ள கால நீடிப்பை இழுத்தடிப்பு செய்வதற்காகவா என கேள்வி எழுபியுள்ளனர்.

தமிழர்கள் செறிந்து வாழும் மற்றும் அதிகளவிலான காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்று தெரிந்தும் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கை வேதனைக்குரியது என மக்கள் தெரிவித்துள்ளனர்.