குடிபோதையில் அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் தங்கொட்டுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுகெந்த பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரே இன்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் சமிஞ்சை காட்டிய போதிலும் அவர் நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இதனால் அவரை துரத்திச் சென்று சோதனையிட்ட போது மோட்டார் சைக்கிளில் சென்றவர் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணை சோதனையிட்ட போது அவர் குடிபோதையில் இருந்தார் என தெரியவந்துள்ளது. அதற்கமைய அவரது மோட்டார் சைக்கிளும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.