உயிரிழந்த நபர் மீண்டும் வந்த அதிசயம்! மகிழ்ச்சியில் உறவினர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்
4393Shares

உயிரிழந்துள்ளதாக நம்பப்பட்ட நபர் ஒருவர் உயிருடன் இருப்பதாக அறிந்து அவரது குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

கடலில் அடித்து செல்லப்பட்ட நபரின் சடலம் மீண்டும் கரைக்கு வரும் என 10 நாட்களாக காத்திருந்த உறவினர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.

மன்னார் பேசாலை பிரதேசத்தில் கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர் ஒருவர், 10 நாட்களின் பின்னர் இந்திய மீனவர்களினால் காப்பாற்றப்பட்டு ராமேஸ்வரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அந்தோனி மரியதாஸ் என்ற 37 வயதுடைய இந்த மீனவர் கடந்த 7ஆம் திகதி மேலும் மூன்று மீனவர்களுடன் கடலுக்கு சென்ற சந்தர்ப்பத்தில் கடல் அலையில் சிக்கி காணாமல் போனார்.

மரியதாஸ் கடலில் மூழ்கியமை தொடர்பில் சக மீனவர்களால் அவரின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் அறிந்த நாளில் இருந்து மரியதாஸின் சடலம் கரை ஒதுங்கும் என குடும்பத்தினர் பேசாலை கடற்கரையில் காத்திருந்துள்ளனர்.

சூறாவளியில் சிக்கில் கடலில் விழுந்த மரியதாஸ் கடலில் மிதந்து தென் இந்தியாவுக்கு சென்ற சந்தர்ப்பத்தில் இந்திய மீனவர்கள் அவரை காப்பாற்றி டோலர் இயந்திரம் ஒன்றில் ஏற்றியுள்ளனர்.

அதன் பின்னர் அவர் உயிருடன் இருப்பதாக குடும்பத்தினரிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.