சட்டவிரோத கைத்துப்பாக்கிகளுடன் முன்னாள் இராணுவத்தினர் இருவர் கைது

Report Print Jeslin Jeslin in சமூகம்

ஹோமாகம பகுதியில் சட்டவிரோதமான முறையில் கைதுப்பாக்கிகளை வைத்திருந்த முன்னாள் இராணுவத்தினர் இருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 3 கைத்துப்பாக்கிகள் மற்றும் 34 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

43 மற்றும் 32 வயதுடைய இருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இராணுவத்தில் பணியாற்றியவர்கள் எனவும், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.