சிவனொளிபாத மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை

Report Print Jeslin Jeslin in சமூகம்

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பக்தர்கள் காசல்றீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களில் நீராட வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நீர்நிலைகளில் நீர் அடர்த்தியாகவும், கடும் குளிர்மையாகவும் காணப்படுவதால் பயணிகள் அவதானமாக இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் வீதியூடாக சிவனொளிபாதமலைக்கு செல்பவர்கள் நீராட பாதுகாப்பான இடங்கள் சில அம்பகமுவ பிரதேச சபையினால் நிறுவப்பட்டுள்ளதாகவும் அந்த இடங்களில் நீராடுமாறும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சில பாதைகள் குன்றும் குழியுமாக காணப்படுவதால் சாரதிகள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.