யாழில் கணவனை அச்சுறுத்த மனைவி எடுத்த விபரீத முடிவு

Report Print Shalini in சமூகம்

யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் கணவனை அச்சுறுத்துவதற்காக தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டதாக கூறப்படும் மனைவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இளவாலை பகுதியில் நேற்று மதியம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் அதனால் கணவனை அச்சுறுத்தும் நோக்கில் மனைவி தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் எரிகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.