புதிய வகை போதைப்பொருளுடன் இளம் வர்த்தகர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்
51Shares

இலங்கைக்குள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத போதைப்பொருள் என கருதப்படும் ஜெல் ஒன்றையும் அதனை பயன்படுத்துவதற்கான உபகரணம் ஒன்றையும் நிக்கவரெட்டிய பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதன்போது, போதைப்பொருளை எடுத்துச் சென்ற சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி விசேட சோதனை ஒன்றுக்காக நகரில் இருந்த போது, கையில் எழுதி வைத்திருந்த இலக்க தகடுடன் சென்ற காரை சோதனையிட்ட போதே போதைப்பொருள் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் சந்தேகநபரை கைதுசெய்துள்ளதுடன், காரும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கார் புத்தளம் பிரதேசத்தில் வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றிடமிருந்து வாடகைக்கு பெறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 24 வயதானவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.