பிரபாகரன் உள்ளிட்டோரை அழைத்துச் சென்ற உலங்கு வானூர்திகளின் தற்போதைய நிலை!

Report Print Shalini in சமூகம்
3133Shares

இலங்கையில் இந்திய அமைதிப்படையால் நடத்தப்பட்ட ‘ஒப்பரேசன் பவான்’ திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்ட எம்.ஐ.-8 உலங்குவானூர்திகள் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் பெங்களூர் ஜலகங்கா விமானப்படைத் தளத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வுகளுடன் இந்த உலங்குவானூர்திகள் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் தயாரிப்பான எம்.ஐ.-8 உலங்குவானூர்திகளை 1972ஆம் ஆண்டு தொடக்கம், கடந்த 45 ஆண்டுகளாக இந்திய விமானப்படையினரே பயன்படுத்தி வந்தனர்.

இந்திய - இலங்கை உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன்னதாக, 1987ஆம் ஆண்டு சுதுமலையில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் எம்.ஐ-8 உலங்குவானூர்தி, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சென்னைக்கு அழைத்துச் சென்றிருந்தது.

1987ஆம் ஆண்டு, ‘ஒப்பரேசன் பவான்’ நடவடிக்கையின் ஒரு கட்டமாக, யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மைதானத்தில் எம்.ஐ-8 உலங்குவானூர்திகள் மூலம் தரையிறக்கப்பட்ட பரா கொமாண்டோக்களின் அணியொன்று விடுதலைப் புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டது.

அந்த அணியைச் சேர்ந்த கோர்க்கா சிங் என்ற இந்தியப் படைச் சிப்பாய் மாத்திரமே உயிர் தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.