இலவமாக கண்ணாடி வில்லைகளை வழங்க 1,700 மில்லியன்

Report Print Steephen Steephen in சமூகம்
24Shares

எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் இலவசமாக கண்ணாடி வில்லைகளை (லென்ஸ்) வழங்கும் வேலைத்திட்டத்திற்காக ஆயிரத்து 700 மில்லியன் ரூபாவை ஒதுக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கண்ணாடி வில்லைகளுக்கான கேள்வி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஒரு இலட்சம் கண்ணாடி வில்லைகள் இறக்குமதி செய்து அரச வைத்தியசாலைகளில் இலவசமாக கண் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனை மேற்கொள்வதில் சில பிரச்சினைகள் ஏற்பட்ட போதிலும் எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் எந்த பிரச்சினைகளும் இன்றி இலவசமாக கண்ணாடி வில்லைகள் வழங்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

40 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 1.7 வீதமானவர்கள் கண் நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.

எதிர்வரும் 2026ஆம் ஆண்டளவில் வயது வந்த குடிமக்களில் 26 வீதமானவர்கள் கண் பார்வையை இழப்பார்கள் என புள்ளிவிபரம் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.

இதனால், இலவசமாக கண்ணாடி வில்லைகளை வழங்கும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து மக்கள் கண் பார்வை இழப்பதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.