மகிந்த அணியின் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களுக்காக தலையீடு செய்யும் பௌத்த பிக்குகள்

Report Print Steephen Steephen in சமூகம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உள்ளூராட்சி சபைகளுக்கு தாக்கல் செய்து, நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ள சில பௌத்த பிக்குகள் முயற்சித்து வருவதாக தெரியவருகிறது.

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான சில பௌத்த பிக்குகள் இது குறித்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பிரிஸூன் கலந்துரையாடியுள்ளனர்.

பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள சகல வேட்புமனுக்களையும் மீண்டும் தயாரித்து தாக்கல் செய்வது குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் மாத்திரமல்லாது தேவை ஏற்பட்டால், ஜனாதிபதியுடனும் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராக இருப்பதாக பிக்குகள் கூறியுள்ளனர்.

அதேபோல் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக நம்பப்பட்ட மகரகமை, பாணந்துறை, வலலல்லாவிட போன்ற பிரதேச சபைகளுக்கு போட்டியிட முடியவில்லை என்றால், தேர்தலில் போட்டியிட்டு பயனில்லை எனவும் இதன்போது பேசப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பௌத்த பிக்குகள் கூறுவது போல் செயற்பட உடனடியான வாய்ப்புகள் இல்லை எனவும் அனைத்து கட்சிகளுக்கும் வாய்ப்பளிக்கும் அடிப்படையில், பொது இணக்கத்தை ஏற்படுத்துவது முக்கியமானது என ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.