விடுதலைப்புலிகளின் முகாம் இருந்த காணியில் கைக்குண்டுகள் மீட்பு

Report Print Kumar in சமூகம்
101Shares

மட்டக்களப்பு - பாவற்கொடிச்சேனை பகுதியில் இருந்து ஒரு தொகை கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

பாவற்கொடிச்சேனை பகுதியில் கைவிடப்பட்ட காணியொன்றில் இருந்து இன்று பிற்பகல் இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன

களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த இடத்தில் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில், 18 கைக்குண்டுகள் மீட்டக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.எம.பி.ஜெயகளும் தெரிவித்தார்.

முன்னதாக விடுதலைப்புலிகளின் முகாமாக இருந்து கைவிடப்பட்ட காணியொன்றிலேயே இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவினைப்பெற்று நாளை செவ்வாய்க்கிழமை குறித்த கைக்குண்டுகள் செயழிலக்கச்செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.