முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் சுனாமி தொடர்பான ஆவணம்

Report Print Mohan Mohan in சமூகம்

2004ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் வெளியிட்டு வைக்கப்பட்ட சுனாமி தொடர்பான ஆவணம் ஒன்று முல்லைத்தீவில் இன்றைய தினம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின் காரணமாக இலங்கையின் கரையோரப் பகுதிகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், சுனாமி காலத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண மக்களின் அவலநிலைகளை ஒளிப்பதிவு செய்து அதனை ஆவணமாக விடுதலைப் புலிகளின் நிதர்சனப் பிரிவினர் வெளியிட்டு வைத்துள்ளனர்.

சுனாமி அனர்த்தத்தின்போது பெருமளவிலான பொதுமக்கள் உயிரிழந்திருந்ததோடு, அதிகளவிலானோர் காணாமல் போயிருந்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு நல்லடக்கம் செய்வதிலும், காணாமல் போனவர்களை கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைப்பதிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் முன்னின்று செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.