விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தேடிய மூவரை புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை நாளை முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெக்கோ இயந்திரம் ஒன்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் அடங்குவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.