சுதந்திரக் கட்சியின் இலவசங்களை தேர்தல் ஆணையம் விநியோகிக்குமா?

Report Print Aasim in சமூகம்

சுதந்திரக்கட்சியின் இலவச நலத்திட்டங்களை தேர்தல் ஆணையம் பொறுப்பேற்று விநியோகிக்க வேண்டும் என்று பிரதியமைச்சர் லக்ஷ்மன் வசந்த வலியுறுத்தியுள்ளார்.

மாத்தளை மாவட்டத்தில் அப்பியாசக் கொப்பிகள் விநியோகிக்கப்படும் நிகழ்வுகளை சுதந்திரக்கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

சுதந்திரக் கட்சியின் மாத்தளை மாவட்ட தலைவரும், பிரதியமைச்சருமான லக்‌ஷ்மன் வசந்த இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

எனினும் இரண்டாவது தடவையாகவும் நேற்று அவர் அப்பியாசக் கொப்பிகள் விநியோகிக்க ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் காரணமாக அப்பியாசக் கொப்பிகளை பெற்றுக் கொள்ள அம்பன்கஹ, பல்லேதென்ன பிரதேச பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சமூகமளித்த பொதுமக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்திருந்தனர்.

இதன்போது ஆவேசமான முறையில் தேர்தல் ஆணையத்தை விமர்சித்த பிரதியமைச்சர் லக்ஷ்மண் வசந்த, இவ்வாறான நலத்திட்டங்களுக்கு தடை போடுவதாயின் தேர்தல் ஆணையம் அவற்றைப் பொறுப்பெடுத்து பொதுமக்களுக்கு விநியோகிக்க முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.