பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கும் முல்லைத்தீவு மக்கள்

Report Print Yathu in சமூகம்
37Shares

முல்லைத்தீவு - மாங்குளம், பனிக்கன்குளம், கிழவன்குளம், ஆகிய பகுதிகளில் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றதாக இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மக்கள் தெரிவிக்கையில்,

ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள மாங்குளம், பனிக்கன்குளம், கிழவன்குளம், போன்ற பகுதிகளில் மக்கள் மீள்குடியேறி 8 வருடங்கள் கடந்த போதும் அதிகளவான குடும்பங்கள் இதுவரை வீட்டுதிட்டங்களைப் பெற்றுக்கொள்ளமுடியாது, தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக இந்த பிரதேசங்களில் வாழ்வாதாரத்தொழில்கள் இன்றி அன்றாடம் விறகு வெட்டி வாழ்க்கை நடத்தும் குடும்பங்கள் இவ்வாறு தற்காலிக வீடுகளில் குழந்தைகள், முதியவர்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இதேவேளை, வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படாத நிலையில் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வரும் தாங்கள் தற்போது பெய்து வரும்மழையால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.