மகளையும் கொன்று தாயும் தற்கொலை - யாழில் நடந்த துயரச் சம்பவம்

Report Print Vethu Vethu in சமூகம்
2977Shares

யாழ்ப்பாணத்தில் தாயொருவர் தனது பிள்ளையை கொலை செய்து தானும் தற்கொலை நேற்று செய்துள்ளார்.

இந்த சம்பவம் யாழ்ப்பாணம், அராலி பகுதியை சேர்ந்த 26 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே இந்த கொடூர செயலை செய்துள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தாயின் தவறான முடிவால் 6 வயதான பாலகி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றைய குழந்தையையும் கொல்வதற்குத் தாய் முயன்றபோதும் அவர் தப்பியோடி அயலவர்களுக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவம் வெளியே தெரியவந்தது.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட சண்டையே அந்தப் பெண் இப்படித் தவறான முடிவெடுப்பதற்குக் காரணம் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையில் நேற்றைய தினம் சண்டை முற்றிய நிலையில் மாலையில் தாயார் தானும் பிள்ளைகளும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

ஒரு மகள் வீட்டைவிட்டு வெளியே சென்றிருந்த நிலையில், கடைசி மகளைத் தூக்கிலிட்டுவிட்டு மற்றைய மகளையும் தூக்கிலிட முயன்றிருக்கிறார். பயந்து போய் தாயிடமிருந்து தப்பித்து ஓடிய அந்தப் பிள்ளை அயலவர்களிடம் தகவல் சொல்லியுள்ளார்.

அயலவர்கள் வந்து பார்த்தபோது தாயும் பிள்ளையும் தூக்கில் தொங்கியபடி இருந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு எடுத்து விரைந்தனர். எனினும் தாயார் ஏற்கனவே இறந்திருந்தார்.

வைத்தியசாலையில் சேர்க்கப்படும் போது உயிருடன் இருந்த சிறுமி 4 மணி நேரப் போராட்டத்தின் பின்னர் உயிரை விட்டார்.

இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார். இருவரது சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.