யாழ். கோட்டைப் பகுதியில் தகனம் செய்யப்படவுள்ள விகாராதிபதியின் உடல்

Report Print Shalini in சமூகம்
373Shares

யாழ்ப்பாணம் நாக விகாரையின் தலைமை விகாராதிபதி மீகஹஜதுரே ஞானரத்ன தேரரின் உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது.

சுகயீனம் காரணமாக கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 20ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரின் இறுதிக் கிரியைகள் யாழ். கோட்டைப் பகுதியில் இன்று இடம்பெறவுள்ள நிலையில், ஆயுதம் தாங்கிய படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.