கிணற்றிலிருந்து 3 வயது சிறுமியின் சடலம் மீட்பு: தாத்தா கைது

Report Print Steephen Steephen in சமூகம்
159Shares

குளியாப்பிட்டிய- பாஹல பொஹிங்கமுவ பிரதேசத்தில் உள்ள கிணற்றில் சிறுமியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பொஹிங்கமுவ பிரதேசத்தில் இன்று சிறுமியின் தந்தையால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

லக்கீசா லக்தூலி அழகியவன்ன என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாத்தா இந்த கொலையை செய்திருக்கலாம் என குளியாப்பிட்டிய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், அவரை கைது செய்துள்ளனர்.

பொலிஸாா் மேற்கொண்ட விசாரணையின் போது, சம்பவம் நடந்த தினத்தன்று சந்தேக நபரான தாத்தா மதுபோதையில் இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.