எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வைத்தியசாலையில்

Report Print Jeslin Jeslin in சமூகம்
921Shares

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவர் நேற்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்படுகின்றது.

திருகோணமலையில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சுகயீனமுற்றதாகவும், அதன் பின்னர் அவர் கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.