இலங்கை அகதிப் பெண்ணுக்கு இலங்கை அகதியால் ஏற்பட்ட அவமானம்

Report Print Shalini in சமூகம்
297Shares

இந்தியா - விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர், கோட்டக்குப்பம் அருகே குடித்து விட்டு இலங்கை அகதிப் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய இலங்கை அகதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் கோட்டக்குப்பம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 26 வயதுடைய அரவிந்தன் என்பவரே இதில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே முகாமில் வசிக்கும் பவித்ரா என்ற இலங்கை அகதிப்பெண் கடைக்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கும் போது, அவரை அரவிந்தன் வழிமறித்துள்ளார்.

குறித்த நபர் குடிபோதையில் இருந்ததுடன், பவித்ராவிடம் ஆபாசமாக பேசியுள்ளார்.

இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட பவித்ரா என்ற இலங்கை அகதிப்பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.