புதையல் தோண்டிய இடத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள அகழ்வுப் பணிகள்

Report Print Suman Suman in சமூகம்
109Shares

விஸ்வமடு பகுதியில் புதையல் தோண்டப்பட்ட இடத்தில், சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் அகழ்வுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அண்மையில் விஸ்வமடுப் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூவர் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே, இன்று சம்பவ இடத்திற்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் அகழ்வுப் பணியை ஆரம்பித்துள்ளனர்.