நத்தார் பண்டிகையை முன்னிட்டு 500 சிறை கைதிகள் விடுதலை

Report Print Steephen Steephen in சமூகம்
42Shares

நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 500 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தகுதி நிலை அறிவுறுத்தல் அனைத்து சிறைச்சாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சிறிய குற்றங்கள் மற்றும் பிணை கட்டணத்தை செலுத்த முடியாது சிறையில் இருக்கும் கைதிகள் இவ்வாறு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட உள்ளனர்.