தேர்தலை ஒத்திவைக்க கோரி பொதுஜன முன்னணி வழக்கு

Report Print Steephen Steephen in சமூகம்
36Shares

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது.

மகரகமை நகர சபையின் தேர்தலை ஒத்திவைக்க கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மகரகமை நகர சபைக்கு தாக்கல் செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வழக்கொன்றை தாக்கல் செய்தது.

வேட்புமனுவில் பெண்கள் என்பதற்கு பதிலாக ஆண்கள் என குறிப்பிடப்பட்டிருந்ததை காரணம் காட்டி தெரிவத்தாட்சி அதிகாரி பொதுஜன முன்னணியின் வேட்புமனுவை நிராகரித்திருந்தார்.