கொழும்பு துறைமுகத்தில் வெளிநாட்டு மதுபான போத்தல்கள்

Report Print Nivetha in சமூகம்
60Shares

கொழும்பு துறைமுகத்தில் வெளிநாட்டு மதுபான போத்தல்கள் ஏற்றப்பட்ட வாகனம் ஒன்று பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வாகனத்தின் சாரதி பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.