இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படும் போதைப்பொருள்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு க்ரீன் டீ என்ற பெயரில் மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் வெளியிட்ட தகவல்களுக்கமைய அவருக்கு எத்தியோப்பியாவில் உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆபிரிக்காவில் மிகவும் இலகுவாக வளரும் தாவர வகை ஒன்றை பயன்படுத்தி போதைப்பொருள் இலங்கைக்கு அனுப்பப்படுகிறது. இதற்கு எத்தியோப்பிய நாட்டவர் ஒருவர் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச பொலிஸாரினால் தேடப்படும் இந்த நபர் இடைக்கிடையே இலங்கைக்கு வருகைத தந்துள்ளார். மேலும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த போதைப்பொருளை பகிரும் நோக்கிலேயே அவர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

க்ரீன் டீ என்ற பெயரில் போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி செல்லப்படுகின்ற கொழும்பு களஞ்சிய அறை ஒன்று அண்மையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டது. இதன்போது இருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.