வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ். இளைஞர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து நேர்ந்த கதி

Report Print Shalini in சமூகம்

சட்டவிரோதமான முறையில் துருக்கி சென்று நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் மினுவாங்கொட நீதவான் சிலானி சத்துரன்தியின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரையும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால் குறித்த இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் துருக்கி சென்ற இவர்கள் அங்கு கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.