ஊருக்குள் வந்து விலங்குகளை விழுங்கிய மலைப் பாம்பு

Report Print Steephen Steephen in சமூகம்

குருணாகல் - தும்மல்லசூரிய, வெலிபென்னக ஹாமுல்ல பிரதேசத்தில் அன்னாசி தோட்டம் ஒன்றில் இருந்து மிகப் பெரிய மலைப் பாம்பை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சுமார் 15 அடி நீளமான குறித்த பாம்பு விலங்குகளை விழுங்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதேசத்தில் வளர்க்கப்பட்ட ஆடுகள் உட்பட சில சிறிய விலங்குகள் கடந்த வாரத்தில் காணாமல் போயிருந்த நிலையில் குறித்த மலைப் பாம்பு தான் விலங்குகளை விழுங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பாம்பு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஊடாக காட்டுப் பகுதியில் விடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.